Best Property Management in India
கோயம்புத்தூர், தொழில் நகரம் மட்டுமல்லாமல் இப்போது தீவிரமாக வளர்ந்து வரும் வீடு வாடகை சந்தையையும் கொண்டுள்ளது. ஐடி பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் ஆகியவை அதிகரித்து வருவதால், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் கோயம்புத்தூரை தங்கள் தங்கும் இடமாக தேர்வு செய்கிறார்கள். இதனால் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் சொத்து முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.
முக்கிய அம்சங்கள்:
ஐடி & தொழில்துறை வளர்ச்சி:
Tidel Park, ELCOT IT Park போன்ற புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகரித்து வருவதால் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கின்றன.
கல்வி:
உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் பெருகி வரும் காரணமாக, மாணவர்கள் கோயம்புத்தூரில் வசிக்க இடங்களை தேடி வருகின்றனர்.இதனால் மாணவர் விடுதிகள் மட்டும் அல்லாமல் அடுக்குமாடி வீடுகள், தனி அறைகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரிக்கிறது.
வாடகை விலை நிலை:
2020 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, கோயம்புத்தூரில் வீட்டின் வாடகை 10% முதல் 25% வரை அதிகரித்துள்ளது.
பிரபலமான பகுதிகள்:
ரேஸ் கோர்ஸ், பீளமேடு, சாய்பாபா காலனி , வடவள்ளி, சரவணம்பட்டி – அதிகமான தேவை உள்ள இடங்கள். இந்த பகுதிகளில் தொழில்நுட்ப பூங்கா, பள்ளி, மருத்துவமனை,வணிக நிறுவனங்கள் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளதால் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
புதிய அபார்ட்மெண்ட் திட்டங்கள்:
ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளின் தேவை பெருகி வருகிறது. குழந்தைகள் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி திடல், கூடம் போன்ற எல்லோருக்குமான வசதிகள், வாடகையாளர்களை அதிகம் ஈர்க்கின்றன. பாதுகாப்பு அமைப்பு, 24x7 கண்காணிப்பு போன்ற வசதிகள் இல்லாத வீடுகளை விட இந்த வகை அபார்ட்மெண்ட்களுக்கு அதிக தேவை இருக்கிறது.
எதிர்கால வாய்ப்புகள்:
மெட்ரோ ரயில் திட்டம், வெளிப்புற வட்டச்சாலை விரிவாக்கம் போன்ற பெரும் வளர்ச்சி திட்டங்கள் வீட்டின் மதிப்பையும் வாடகை மதிப்பையும் உயர்த்தும்.
வீட்டு உரிமையாளர்களுக்கான குறிப்புகள்:
முழு வீடு உடைமைகளுடன் கூடிய வீட்டுகள் (Furnished apartments) வாடகை வருமானத்தை 15% முதல் 20% வரை அதிகரிக்க முடியும்.
சரியான வாடகையாளர்களை தேர்வு செய்வது, சட்டப்படி ஒப்பந்தங்களை உருவாக்குவது, அவ்வப்போது வீட்டை சோதனை செய்வது கட்டாயம்.
Property Management Services மூலம் பராமரிப்பு பணி சங்கடம் இல்லாமல், வீட்டிலிருந்து நிலையான வருமானத்தை எளிதாக பெற முடியும்.
கோயம்புத்தூர் வாடகை வீட்டு சந்தை அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற உள்ளது. நீங்கள் சொத்து உரிமையாளர், முதலீட்டாளர் அல்லது வாடகையாளர் என யாராக இருந்தாலும் – திட்டமிட்டு, திறமையாக முதலீடு செய்து, சந்தை நிலவரங்களை எப்போதும் கவனித்து செயல்படுங்கள்!
உங்கள் சொத்து பாதுகாப்பும், வாடகை வருமானமும் நிம்மதியாக இருக்க நிம்மதி சொத்து மேலாண்மை சேவையை பயன்படுத்துங்கள்.
தொடர்பு கொள்ள: +91 766 700 8999 | www.nimmadhi.com