பிளாட் மற்றும் அபார்ட்மெண்டில் பார்க்க வேண்டிய முக்கிய 10 வாஸ்து அம்சங்கள்/சாஸ்திரங்கள்

Best Property Management in India

 • +91 766 700 8999
 • Blog
  பிளாட் மற்றும் அபார்ட்மெண்டில் பார்க்க வேண்டிய முக்கிய 10 வாஸ்து அம்சங்கள்/சாஸ்திரங்கள்
  Nimmadhi March 12, 2019

  பிளாட் மற்றும் அபார்ட்மெண்டில் பார்க்க வேண்டிய முக்கிய 10 வாஸ்து அம்சங்கள்/சாஸ்திரங்கள்

  enter image description here

  பிளாட் மற்றும் அபார்ட்மெண்டில் பார்க்க வேண்டிய முக்கிய 10 வாஸ்து அம்சங்கள்/சாஸ்திரங்கள்

  நீங்கள் ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒரு பிளாட்டை வாங்கும் போதோ அல்லது ஒரு பிளாட்டை வாடகைக்காக பார்க்கும் போதோ சில வாஸ்து அம்சங்களை பார்ப்பது மிகவும் நல்லது. அடுக்குமாடி குடியிருப்புகளை விரும்பும் பலரது எண்ணம், வாஸ்து அந்த அளவு முக்கியமானதல்ல என்பது , அதற்கு காரணம் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி வீடுகள் தரையில் இல்லை என்பதும், பல அடுக்குகளை உடையதால் குடியிருப்புகள் தரையை தொடவில்லை என்பதும் ஆகும். அவர்கள் நினைத்தவாறு வாஸ்து இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எந்த உயர் அடுக்கு பிளாட்டில் நீங்கள் வசித்தபோதும் உங்களது அஸ்திவாரம் என்பது தரையில் தான் உள்ளது என்பதை மறவாதீர்கள். அடுக்குமாடி குடியிருப்பின் தரை பகுதியே மூல ஆதாரம் நீங்கள் தரையுடனேயே இணைக்கப்பட்டுள்ளீர்கள். அதனால்தான் நாங்கள் இங்கே உங்களுக்கு உதவும் 10 வாஸ்து முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளோம். இது வாஸ்துவை சரியாக புரிந்துகொண்டு ஒரு வாஸ்து அம்சம் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பைக் கண்டுபிடிக்க உங்களுக்கு பேருதவி புரிகிறது.

  enter image description here

  ஒழுங்கற்று வடிவமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடிகளுக்கு செல்ல வேண்டாம். சதுர அல்லது செவ்வக வடிவிலான கட்டிடங்களுக்கு செல்லுங்கள்.

  தெற்கு அல்லது மேற்கு திசையில் பெரிய நீர் நிலைகளைக் கொண்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை தவிர்ப்பது நல்லது.

  அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயில் தெற்கு அல்லது மேற்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் அமைந்திருந்தால் அது உங்களுக்கு உகந்ததல்ல , அது எதிர்மறை அதிர்ஷ்டத்தின்பால் உங்களை ஈர்க்க வல்லது. கிழக்கு மற்றும் வடகிழக்கு நுழைவாயிலுக்கு சிறந்த திசைகளாக உள்ளன. இது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறையானவை எனக் கூறப்படுகிறது.

  உங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் தலைவாசல்/பிரதான கதவு வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு சுவரின் வட-கிழக்கு திசையில் இருக்க வேண்டும். உங்கள் கதவானது லிஃப்ட்டிற்கு முன் நேரடியாக திறக்குமாறு அமையவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறை தலைவாசல் நோக்கி இருத்தலை தவிர்த்தல் வேண்டும் . பெரிதும் விரும்பத்தக்க வகையில் அது கிழக்கு நோக்கி இருப்பதே வீட்டிற்கு மிக உகந்ததது. இங்கே எங்கள் சமையலறை வாஸ்து குறிப்புகள் பற்றி மேலும் படிக்கலாம்.

  வட கிழக்கு திசையை நோக்கி உள்ள ஆழ்துளைக் கிணறுகள், பம்புகள் மற்றும் புல்வெளிகள் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பார்ப்பது நல்லது.

  அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியானது தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமைக்கப்பெற்றதைக் கண்டால், அந்த குடியிருப்புக்கு வாடகைக்கு செல்லவோ அல்லது அந்த குடியிருப்பை நீங்கள் வாங்கவோ வேண்டாம்.

  நீங்கள் நிறையப் பயணம் செய்பவராக இருந்தால், பின்வருவதை கருத்தில் கொள்வது நல்லது!

  enter image description here

  மேற்கில் முற்றிலுமாக மூடப்பட்ட எல்லை சுவர் கொண்ட குடியிருப்புகள் கிழக்கு அல்லது வடகிழக்கில் திறந்த வெளி நிறைய அமையப்பெற்றுள்ள குடியிருப்புகள் உங்களது சொத்தில் தென் மேற்கில் இருந்து வட கிழக்காக ஒரு சரிவுடன் கூடிய குடியிருப்புகள்

  பாதுகாப்பு உங்கள் முக்கிய கவலையாக இருக்கிறது என்றால் அடுக்குமாடி வளாகத்தில் பாதுகாவலாளியின் அறைய எங்கும் அமைந்து இருக்கலாம் , ஆனால் கட்டிடத்தின் வட-கிழக்கு மூலையில் பெரும்பாலும் அமையற்றிருப்பதை நீங்கள் காணமுடியும்.

  நீங்கள் வாங்கப் போகும் அடுக்குமாடி குடியிருப்பின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை பாருங்கள். அவை இரட்டைப்படை எண்களாக உள்ளதா? ஆம் என்றால், அடுத்த கட்டமாக அனைத்து கதவுகளும் உட்புறமாக திறக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆம் என்றால், இது நேர்மறைத் தன்மையை வெளியே விடாமல் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

  enter image description here

  நிம்மதியிடம் நீங்கள் தேர்வு செய்வதற்கான 1000 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்டுயுள்ளது . வாஸ்து உங்களுக்கு முக்கியம் என்று நீங்கள் கருதினால், வாஸ்து அம்சங்கள் பரிபூரணம் பெற்ற வாஸ்து இணக்கமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தேர்வு செய்ய உங்களுக்கு நாங்கள் உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். நிம்மதி பயன்படுத்துவதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் எந்த தரகுப் பணமும் எங்களிடம் செலுத்த வேண்டியதில்லை என்பதுதான்!

  Tags:  Category:

  10 வாஸ்து அம்சங்கள்