வில்லா மற்றும் தனி வீட்டிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்

Best Property Management in India

 • +91 766 700 8999
 • Blog
  வில்லா மற்றும் தனி வீட்டிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்
  B. Priya July 28, 2023

  வில்லா மற்றும் தனி வீட்டிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்

  வில்லா மற்றும் தனி வீட்டிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்

  சொந்த வீடு என்பது கிட்டத்தட்ட அனைவரின் கனவாக இருக்கிறது. ஆனால் ஒரு வீட்டைத் தேடும் போது எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், ஒருவர் வில்லாக்களுக்குச் செல்ல வேண்டுமா அல்லது தனி வீடுகளுக்குச் செல்ல வேண்டுமா என்பதுதான்.

  நீங்கள் ஒரு வில்லா அல்லது தனி வீடு வாங்க விரும்பினால், அவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடுகளை சரியாகச் சரிபார்த்து, பின்னர் உங்களுக்கான சிறந்ததைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  வில்லா மற்றும் தனி வீடு: வடிவமைப்பு

  வில்லாக்கள் பொதுவாக கட்டிடக்கலையில் நவீனமானவையாகும். வில்லாக்கள் ஆடம்பரமான அழகிய வசதிகளை கொண்டது. தனி வீடுகள் எளிமையான நமது தேவைக்கேற்ற வசதிகளை கொண்டது.

  வில்லா மற்றும் தனி வீடு: வசதிகள்

  வில்லாக்கள் பாதுகாப்பான குழந்தைகள் விளையாடும் பகுதி, நடைபயிற்சி அல்லது ஜாகிங் டிராக், பல விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளம் மற்றும் கிளப்ஹவுஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

  அதேசமயம் தனி வீடுகள் அழகான முற்றங்கள் பின்புற கொள்ளை புறங்கள், மொட்டை மாடிகள், முன்புற வராண்டாக்கள் இவைகளை எல்லாம் கொண்டுள்ளது. இது அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளை கொண்டது.

  வில்லா மற்றும் தனி வீடு: இருப்பிடம்

  வில்லாவிற்கும் வீட்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், வில்லாக்கள் பெரும்பாலும் முக்கிய மற்றும் பிரத்தியேகமான பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. வில்லாக்கள் என்று நாம் குறிப்படுவது கேட்டட் கம்யூனிட்டி என்று அழைக்கப்படும் தொகுப்பு தனி வீடுகளாகும். மறுபுறம், தனி வீடுகள் சட்டப்பூர்வ-தனியான குடியிருப்புகள், அவை எங்கும் கட்டப்படலாம். தளத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து, அவை குடியிருப்பு பகுதிகளில், அல்லது வணிக கட்டிடங்களுக்கு இடையில் கட்டப்படலாம்.

  வில்லா மற்றும் தனி வீடு: பாதுகாப்பு

  வில்லாக்களில் பெரும்பாலும் வாயிலில் பாதுகாப்பு பணியாளர்கள் கேமராக்கள் என 24×7 பாதுகாப்புடன் கூடிய நுழைவாயில் அமைந்துள்ளன, எனவே உரிமையாளர் வேலைக்குச் சென்றாலும் அல்லது ஊருக்கு வெளியே பயணம் செய்தாலும் கூட, வீடு பாதுகாப்பாகவும் கவனித்துக் கொள்ளப்படுகிறது.

  தனி வீடுகளில் உரிமையாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பு வசதிகளை விருப்பப்பட்டால் அமைத்து கொள்ளலாம்.

  பொதுவாக, வில்லாக்கள் தனி வீடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

  புதிய வீட்டில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். நீங்கள் தனி வீடு அல்லது வில்லாவை வாங்க விரும்பினால், தயவுசெய்து உங்கள் கனவு இல்லத்தை முன்பதிவு செய்ய www.nimmadhi.com ஐ பார்வையிடவும்!

  .

  .

  Tags:  Category: